சென்னை:-நடிகை பிரியாமணி கன்னடத்தில் வியூகம் என்றொரு படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜயசாந்தி கெட்டப்பில் தோன்றும் பிரியாமணி, சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் போலீசாக நடித்தபோது முறையான சண்டை பயிற்சிகளை எடுத்திருந்த பிரியாமணி, இந்த படத்தில் அதைவிட அதிரடியான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம். மேலும், மலையாளம், தெலுங்கில் பிரியாமணிக்கு ஓரளவு மார்க்கெட்டில் இருப்பதால் இப்படத்தை அந்த மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இப்படி கிளாமர் கதாநாயகியில் இருந்து ஆக்சனுக்கு தாவி விட்ட பிரியாமணி, இனிமேல் வில்லத்தனமான நெகடீவ் ரோல்கள் கிடைத்தாலும் தாராளமாக நடிப்பாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி