சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா,ராதாரவி, கருணாகரன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படக்குழுவினரின் புகைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடியனான பிரம்மானந்தமும் இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
லிங்கா படத்தில் பிரம்மானந்தம் நடிப்பதாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் லிங்கா படக்குழுவில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, பிரம்மானந்தம் இந்த படத்தில் முக்கிய காமெடியன் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலை வெளியிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி