சென்னை:-மகேஷ் பாபு ஜோடியாக தமன்னா நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘ஆகடு’ படத்தின் தோல்விக்கு தமன்னாவின் ராசிதான் காரணம் என சிலர் சொல்லி வருகிறார்களாம். தமன்னா ஹிந்தியில் நாயகியாக நடித்த படங்கள் தோல்வியடைந்ததற்கு அவருடைய ராசியையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.தமன்னா ஹிந்தியில் நாயகியாக நடித்த ‘ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ், இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன.
இதில் ‘இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ படத்தில் வசூல் நாயகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் நாயகனாக நடித்திருந்தார். அப்படிப்பட்டவரின் வசூல் சாம்ராஜ்யத்தையே தமன்னாவின் ராசிதான் கவிழ்த்துவிட்டதென்றும் கூறுகிறார்கள். அது தெலுங்கிலும் தொடர்வதுதான் பரிதாபத்திற்குரியது. மகேஷ் பாபு நாயகனாக நடித்து வெளியான ‘ஆகாடு’ படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் எந்த புதுவிதமான அம்சமும் இல்லாததால்தான் தோல்வியடைய நேரிட்டது என விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வர, சிலரோ தமன்னாவின் ராசிதான் காரணம் என அவருடைய பெயரை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி