சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘ஐ’ படத்தில் பணிபுரிந்தது தனக்கு புது அனுபவமாக இருந்தது என்று பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணிபுரிந்த விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ‘ஐ’ படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும். ஒரு தனிமனிதனால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதற்கு ஷங்கர் ஒரு உதாரணம் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி