சென்னை:-கிரீடம் படத்தில் நடித்த நட்பை வைத்து தெய்வத்திருமகள் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியபோது விக்ரமுடன் நடிக்க கல்லெறிந்தார் திரிஷா.ஆனால், அனுஷ்கா ஏற்கனவே கமிட்டாகி விட்டதாக சொன்ன அவர், இன்னொரு நாயகிக்கு எனது மதராசப்பட்டினம் படத்தில் நடித்த எமிஜாக்சனையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று த்ரிஷாவுக்கு நோ சொல்லி விட்டார். அதனால் அந்த இரண்டாவது நாயகி வாய்ப்பைகூட ஹாலிவுட்டில் இருந்து வந்த நடிகை தட்டிப்பறித்து விட்டாரே என்று புலம்பினார் திரிஷா.
அப்படி மனதளவில் தனது தொழில் எதிரியாக திரிஷா நினைத்துக்கொண்டிருந்த எமிஜாக்சன், இப்போது த்ரிஷாவே என்னை கவர்ந்த முதல் கோலிவுட் நடிகை என்று சொல்லி அவர் மனதில் இருந்து வந்த பகை உணர்வை நட்பாக மாற்றியிருக்கிறார். எமிஜாக்சன் தனது டுவிட்டரில் இதை வெளியிட்டிருப்பது திரிஷாவின் காதுகளை எட்டியதைத் தொடர்ந்து, எமியின் நடிப்பையும் தன் பங்குக்கு புகழ்ந்து தள்ளிய திரிஷா, அவர் நடித்து வெளியாக உள்ள ‘ஐ’ படம் வெற்றி பெறவும் மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி