செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…

ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…

ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!… post thumbnail image
இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய 9-வது நாளில் ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.வில்வித்தை ஆண்கள் அணியில் இந்தியாவும் தென்கொரியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன.

முதல் ஆறு ஏய்தலில் இந்தியா 55-54 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. 9 ஏய்தலில் 84-82 என்ற கணக்கில் முன்னிலை இருந்தது. 15-வது ஏய்தலில் 142-140 என முன்னிலை பெற்றது.
இறுதியில் 227-225 புள்ளிகள் அடிப்படையில் தென்கொரியாவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி