செய்திகள்,திரையுலகம் வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…

வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…

வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!… post thumbnail image
சென்னை:-சில மாதங்களில் வெளியான படம் சதுரங்க வேட்டை. வினோத் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரங்க வேட்டை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மீடியாக்களும் சதுரங்க வேட்டை படத்தை பாராட்டித்தள்ளின.

சதுரங்க வேட்டை படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இயக்குநர் வினோத், தற்போது மூன்று கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம்.அதில் ஒரு கதை ‘சதுரங்க வேட்டை’யின் இரண்டாம் பாகமாம்.முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், அதைவிட சுவாரஸ்யமாகவும் அப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி வருகிறார் வினோத்.சதுரங்க வேட்டை பார்ட் -2வில் முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி