செய்திகள்,திரையுலகம் கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…

கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…

கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!… post thumbnail image
சென்னை:-நடிகை சினேகா இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா ஹீரோயின்.

இன்னொரு ஹீரோயினாக ஆத் ஷர்மா நடிக்கிறார். இதில் சினேகா சமந்தாவின் அக்காவாக நடிப்பதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தன்யா, ராதா கிருஷ்ணா ஆகியோர் ஹாசினி கிரியேஷன் பேனரில் தயாரிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி