இன்சியான்:-தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று படகுப்போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் சவான் சிங் வெண்கலம் வென்றார். இதேபோல் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் (டபுள் டிராப்) இந்திய அணி வெண்கலம் வென்றது. இதன்மூலம் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 15-வது இடத்தில் நீடிக்கிறது.
ஆடவர் 64 கிலோ லைட்வெல்ட்டர் போட்டியில் ஜப்பான் வீரர் மாசாட்சுகு கவாச்சியை எதிர்கொண்ட மனோஜ் குமார் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குகூட அவரால் முன்னேற முடியாமல் போனது. முன்னதாக, 46 முதல் 49 கிலோ எடைப்பிரிவினருக்கான லைட் ப்ளை பிரிவில் தேவேந்திரோ சிங் காலிறுதிக்கு முன்னேறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி