செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அவதார் படத்தை மிஞ்சும் ‘ஐ’ படத்தின் ரிலீஸ்!…

அவதார் படத்தை மிஞ்சும் ‘ஐ’ படத்தின் ரிலீஸ்!…

அவதார் படத்தை மிஞ்சும் ‘ஐ’ படத்தின் ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-இரண்டு வாரங்களுக்கு முன் ஐ படம் 20000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று செய்தி வெளியானது. ஹாலிவுட் படங்களிலேயே நமது மக்களை சமீப வருடங்களில் அதிகம் ஈர்த்த படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார். அதன் பிரம்மாண்டமும், கதையும் நமக்கு மிகவும் நெருக்கமாக அமைந்து அந்தப் படத்தை இந்தியாவிலும் ஓட வைத்தது, உலகம் முழுவதும் அந்தப் படம் சாதனை புரிந்தது. இப்போது அவதார் படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஐ படம் அமையும் என்றும் பேசி வருகிறார்கள்.

ஒரு சிலர் அவதார் படம் உலகம் முழுவதும் வெளியான திரையரங்குகளை விட ஐ படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் செய்தியைப் பரப்பி வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கணக்குப்படி ஐ திரைப்படம் சீனாவில் 10,000 திரையரங்குகளிலும், இந்தியாவில் சுமார் 3,500 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாம். இதில் உலகத்தில் உள்ள மற்ற மொழிகளை அவர்கள் சேர்க்கவில்லை.

அவர்கள் சொன்ன கணக்குப்படியே சுமார் 15000 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளதாம். ஆனால், அவதார் படம் உலகம் முழுவதும் சுமார் 14500 திரையரங்குகளில் மட்டுமே வெளியானதாம். அவர்கள் சொல்லும் கணக்குப்படி அவதார் படத்தை மிஞ்சி ஐ படம் சாதனை புரியும் அளவிற்கு திரையரங்குகளில் வெளியானால் தமிழ்த் திரையுலகத்திற்குக் கொண்டாட்டம்தான். அப்படிப்பட்ட சாதனையை இந்தியத் திரையுலகில் ஒரு தமிழ்ப் படம் புரிவதற்கு நாம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி