சென்னை:-ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்து வரும் அஜீத்தின் 55வது படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் அஜீத்துடன் சேரும் முதல் படம் இது. அதுபோல் தனது நெருங்கிய நண்பரான கௌதம் மேனன் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்காக கூடுதல் கவனம் செலுத்தி இசையமைத்து வருகிறார் ஹாரிஸ்.
ஏற்கெனவே சென்னையில் ஒரு சில பாடல்களுக்கு இசையமைத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், பிரான்சில் 3 பாடல்களுக்கு இசையமைக்கப் போகிறாராம். அஜீத்தின் 55-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி