மும்பை:-ரன்பீர் கபூரும் கத்ரினா கைப்பும் காதலிப்பது பாலிவுட்டில் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கத்ரினாவோ, ரன்பீரோ அது பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் கூறிக் கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ரஜ்பீருடனான திருமணம் பற்றி கத்ரினாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எங்கள் உறவு பற்றி தினசரி அப்டேட் செய்து வருகிறேன்.
சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏதும் எனக்கில்லை. அதை பற்றி நினைப்பதற்கும் எனக்கு நேரமில்லை என கூறினார்.முதலில் நழுவிய அவர் பின்னர் ஒருவழியாக அவர்களிடையேயான உறவை ஒப்புக் கொண்டார். அவர்கள் உறவு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த கத்ரினா, ரன்பீர் பற்றி இன்னும் தெளிவாக நான் சொல்ல வேண்டுமானால், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கம் அவர். எனது வாழ்க்கையில் அவர் பெரும் பங்கு வகிக்கிறார். இதன் அர்த்தம் எங்கள் ரசிகர்களுக்கு நன்றாக புரியும். மேலும் அவர்களை திருப்திபடுத்த இது போதுமான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி