சென்னை:-உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால் விட்டார்.
மம்முட்டி அவரது சவாலை ஏற்று தனது விவசாய நிலத்தில் மரங்களை நட்டுவிட்டு அவர் சூர்யாவுக்கு சவால் விட்டார். தற்போது சூர்யா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கும், இந்தி நடிகர் அமீர்கானுக்கும் சவால் விட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி