இதனால் இதற்கு முன்பு தனது படங்களில் நடித்த காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்ததால் அதிருப்தியில் இருந்து வந்த மகேஷ்பாபு, இப்போது தமன்னா முழு ஒத்துழைப்பு கொடுத்ததையடுத்து அவரைப்பற்றியும் மேடைகளில் பெருமையாக பேசினாராம்.
இதனால், இந்த ஆகடு படம் ஹிட்டாக அமைந்து விட்டால் அடுத்தடுத்து மகேஷ்பாபுவின் அணுக்கிரகம் தனக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்று எதிர்பார்க்கும் தமன்னா, ஆகடு படம் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பாகுபலி படப்பிடிபபில் இருந்தபோது சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி