சென்னை:-நடிகை பிரியாமணிக்கு புலிகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில மிருகக்காட்சிகளில் காட்டில் சுதந்திரமாக அலையும் புலிகளை கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைத்துள்ளார்கள். அது மிருக காட்சி சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், மனிதர்களை வாழ்நாள் முழுக்க ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். அதே மாதிரிதானே விலங்குகளுக்கும் இருக்கும். அதனால் மிருக காட்சி சாலைகளில் புலிகளை கூண்டிற்குள் அடைத்து வைக்காமல், அவை காட்டுக்குள் சுதந்திரமாக திரிவது போன்று அவற்றை பராமரிக்க வேண்டும். அதுதான் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் பிரியாமணி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி