சமீபத்தில் லைகா நிறுவனத்தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து. எனக்கும், ராஜபக்சேவுக்குமிடையே எந்த தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக வேண்டுமென்றே வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள் என்று விளக்கமளித்தார்.இதையடுத்து, கத்தி ஆடியோ விழாவில் இதுபற்றி விஜய் பேசுகையில், நாங்க படம் எடுக்கிறது சண்டை போடுவதற்காக அல்ல. தியேட்டருக்கு வரும் அனைவரும் சந்தோசமா படம் பார்த்து ரசிக்கிறதுக்காகத் தான். யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இந்த படத்தை எடுக்கல.
மேலும், நான் தியாகின்னு சொல்ல வரல, ஆனா தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்ல. கொஞ்ச நாளாவே கண்டபடி வதந்தி பரப்பி விடுறாங்க. உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனா இந்த மாதிரி வதந்திக்கெல்லாம் எப்படி விளக்கம் கொடுக்க முடியும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி