சென்னை:-நடிகை லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன் தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும் என்று சில டைரக்டர்கள் நினைக்கிறார்கள்.
கயல் வெளியான பிறகு அவரது நடிப்பும் லட்சுமிமேனன் ரேஞ்சுக்கு இருந்தால் உடனடியாக தங்கள் படங்களுக்கும் ஆனந்தியை கமிட் பண்ணி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், தற்போது ஜி.வி.பிரகாஷின் திரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் களவாணி பட சற்குணம் இயக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் ஆனந்தி. பிரபுசாலமனின் கயல் படத்தில் ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கும் பட்சத்தில் லட்சுமிமேனனுக்கான வாய்ப்புகள் அவரை முற்றுகையிடும் அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி