சென்னை:-தமன்னாவுக்கும், ஸ்ருதிக்குமிடையே தொழில்முறை போட்டி நடப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழில் பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இந்தியில் வெல்கம் பேக், கப்பார் படங்களை முடித்து விட்டு யாரா, ராக்கி ஹாண்சம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த ரேஸ்குர்ரம் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவுடன் ஆகடு படத்தில் நாயகியாக நடித்து விட திட்டமிட்டிருந்தார். அந்த வாய்ப்பைத்தான் லாவகமாக தட்டிப்பறித்து விட்டாராம் தமன்னா. அதிலிருந்துதான் தமன்னா-ஸ்ருதிஹாசனின் நட்பில் விரிசல் விழுந்து விட்டதாம்.
அதனால், இப்போது ஏதாவது விழாக்களில் இருவரும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தாலும் முன்பு மாதிரி கட்டித்தழுவியெல்லாம் நட்பு வளர்ப்பதில்லையாம். முடிந்தவரை அவரை கண்டுகொள்ளாதது போலவே முகத்தை திருப்பிக்கொண்டு கடந்து சென்று விடுகிறாராம் ஸ்ருதிஹாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி