மும்பை:-ஹிருத்திக் ரோஷனுக்கும் சல்மான் கானுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவதாக சமீப காலமாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் உறுதிப்படுத்தி உள்ளதாம்.சில நாட்களுக்கு முன் ஹிருத்திக், நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரின் புதிய படமான பேங் பேங் பற்றி கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஹிருத்திக், சாதனைகளை முறியடுக்கும் படமாக அது இருக்கும் என தெரிவித்தார்.
இது சாதாரண வார்த்தையாக இருந்தாலும், அவர் உள் அர்த்தத்துடன் கூறியதாக பாலிவுட்டில் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.சல்மான் நடித்து வெளியாகி, வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஹிட்டாக கிக் படத்தின் வெற்றியை மனதில் வைத்து தான் ஹருத்திக் இந்த வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி