நடிக்க வருவதற்கு முன்பே நான் அகமதாபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங் காலேஜ்ல படிச்சு பட்டம் வாங்கினேன். என்னோட திறமைய பார்த்து பலர் நீங்க ஒரு டிசைனிங் ஸ்டூடியோ ஆரம்பிங்கன்னு சொல்லிகிட்டிருந்தாங்க. குறிப்பாக இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி உன்னோட திறமையையும், படிப்பையும் வீணாக்காதே உருப்படியா ஏதாவது செய்யுன்னு சொன்னாங்க. அதுக்கு இப்பதான் நேரம் வந்தது. ஆரம்பிச்சிட்டேன். என்னோட டிசைன் ஸ்டூடியோவுக்கு அஜீன்னு பெயர் வைத்திருக்கிறேன். அஜீ என்றால் மராத்தி மொழியில் பாட்டி என்று அர்த்தம். எனக்கு என் பாட்டியை ரொம்ப பிடிக்கும். அதான் அந்தப் பெயர்.பொதுவா இந்தியாவோட டிசைனிங் பீல்டை காப்பி பேஸ்ட்டுனு கிண்டல் பண்ணுவாங்க.
அதாவது மற்ற நாட்டு டிசைன்களை காப்பி அடிச்சுதான் நாம டிசைன் பண்றதா சொல்வாங்க. இதை மாத்தணும்னு நினைச்சேன். நான் டிசைன் செய்த நாற்காலிகளை நியூயார்க்ல நடந்த கண்காட்சியில் வைத்தேன். அதை பார்த்து அவர்கள் காப்பி அடிச்சிட்டு போனாங்க. இப்போ என்னோட ஸ்டூடியோவுக்கு பாலிவுட் ஸ்டார்ஸ் வர்றாங்க.ஸ்டூடியோ ஆரம்பிச்சிட்டதால நடிப்பை கைவிடவில்லை. நல்ல கேரக்டர் கிடைத்தால் நடித்துக் கொண்டும் இருப்பேன். என்கிறார் லேகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி