சென்னை:-நடிகர் விஜய் சத்தமேயில்லாமல் தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர்கள் சங்கத்திற்காக ரூ.25 லட்சம் ரூபாயை சமீபத்தில் விஜய் நிதியுதவியாக அளித்துள்ளார். உதவி இயக்குனர்கள் சம்பள பிரச்சினை உள்பட பல பிரச்சினைகளில் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருவதை கேள்விப்பட்ட விஜய். தானாகவே முன்வந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த செய்தியை விஜய் தரப்பிலிருந்து யாரும் வெளியில் சொல்லவில்லை. இந்த நிதியை பெற்ற இயக்குனர் சங்கத்தின் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஒரு சில ஆயிரங்கள் நிதியுதவி கொடுத்தாலே மீடியாக்களை அழைத்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒருசில நட்சத்திரங்கள் முன் விஜய் இதுமாதிரி சத்தமேயில்லாமல் பல லட்சங்கள் நிதிஉதவி செய்து வருவது ரசிகர்கள் அவர்மீதுள்ள வைத்துள்ள நன்மதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி