சென்னை:-சினிமாவில் நடித்து சம்பாதிப்பதில் ஒரு தொகையை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளின் படிப்பு செலவு மற்றும் ஏழை பெண்களின் திருமண உதவி உள்பட பல நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருபவர் நடிகர் விஜய்.அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக சமீபத்தில் ரூ. 25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளாராம் விஜய்.
ஆனால், அவரிடத்தில் நிதி உதவியை யாருமே கேட்கவில்லையாம். உதவி இயக்குனர்களின் சம்பளப்பிரச்சினை உள்பட மேலும் சில பிரச்சினைகளுக்கிடையே இயக்குனர் சங்கம் செயல்பட்டு வருவதை அறிந்த விஜய், இந்த உதவியை தானே முன்வந்து செய்துள்ளாராம்.இதுபற்றி விஜய்தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், இயக்குனர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள சில இயக்குனர்கள் தற்போது விஜய் செய்த இந்த உதவி பற்றி வெளியில் கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி