தமிழ்ப்படங்களின் பட்ஜெட் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை தாண்டிவிட்டன. இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படம் என்ற பெருமை ஐ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஐ திரைப்படத்தின் பட்ஜெட் 185 கோடி ரூபாய். ஐ படத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபலி தெலுங்குப்படத்தின் பட்ஜெட். இதன் பட்ஜெட் 175 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ளது கோச்சடையான் படம். இப்படத்தின் பட்ஜெட் – 150 கோடி. இப்படங்களுக்கு அடுத்த இடங்களை பிடித்திருப்பது..மூன்று ஹிந்திப்படங்கள். ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பட்ஜெட் 130 கோடி. மற்றவை தூம் 3 மற்றும் கிரிஷ் -3. தூம் 3 படத்தின் பட்ஜெட் -125 கோடி. க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் -115 கோடி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி