அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது,
நான் அஜீத்தின் தீவிர ரசிகையாக இருக்கிறேன். அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். அஜீத்தை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களுக்கும் ஹன்சிகா தன்னை ஜோடியாக்கும்படி வற்புறுத்தி தூது அனுப்பி இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி