தங்களது மகளுக்கு தெய்வ அருள் இருப்பதாகவும், உயிருடன் புதைத்தால் சரியாகிவிடும் என்று அவர்கள் கருதினர். இதை தொடர்ந்து சிறுமி குஷ்புவை உயிரோடு புதைத்தனர். அதோடு அவர் புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர்.அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அங்கு குவிந்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர். அவர்கள் பழங்கள், பூக்கள், பணங்களை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனால் அந்த கிராமம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி கடுமையான வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இந்த சம்பவம் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி