செய்திகள்,விளையாட்டு விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…

விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…

விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!… post thumbnail image
மும்பை:-இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்து மோசமாக தோற்றது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீராட் கோலி ஆட்டம் இந்த தொடரில் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.இங்கிலாந்து தொடரில் வீராட் கோலி ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மேலும் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்தார். இந்நிலையில் கோலி, தனது பேட்டிங் தவறை திருத்த வேண்டும் என்று தெண்டுல்கரிடம் கோரிக்கை விடுத்தார். இதை தெண்டுல்கரும் ஏற்று கொண்டார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷனில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கோலிக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக ஆப்–ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை எப்படி ஆடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் தெண்டுல்கர் அம்பயர் பகுதியில் நின்று கோலியின் பேட்டிங் உற்று கவனித்தார். அவர் செய்த தவறை திருத்தினார். இந்த பயிற்சியை அவர் சில மணி நேரம் அளித்தார். இந்த பயிற்சியை 2 அல்லது 3 நாள் கோலிக்கு தெண்டுல்கர் அளிப்பார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி