மேலும் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்தார். இந்நிலையில் கோலி, தனது பேட்டிங் தவறை திருத்த வேண்டும் என்று தெண்டுல்கரிடம் கோரிக்கை விடுத்தார். இதை தெண்டுல்கரும் ஏற்று கொண்டார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷனில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கோலிக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக ஆப்–ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை எப்படி ஆடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் தெண்டுல்கர் அம்பயர் பகுதியில் நின்று கோலியின் பேட்டிங் உற்று கவனித்தார். அவர் செய்த தவறை திருத்தினார். இந்த பயிற்சியை அவர் சில மணி நேரம் அளித்தார். இந்த பயிற்சியை 2 அல்லது 3 நாள் கோலிக்கு தெண்டுல்கர் அளிப்பார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி