வடகிழக்கு மாநில மக்களின் நடிப்பை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, இந்த படத்திற்கு உண்மையான தோற்றத்தை கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம். அதன் ஒரு முயற்சியாகவே வடகிழக்கு பகுதிகள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மக்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். படத்தில் எனக்கு கோச்சாக வருபவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இது மேரியை பற்றிய கதை என்பதால் வடகிழக்கு பகுதி மக்களின் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு சிலரை தவிர யாரும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நடிக்க வரவில்லை. இருண்ட பகுதியாக இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகவும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விமர்சனத்தை என்னால் ஏற்க முடியாது. அது தவறானதும் கூட என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி