ஒரு கட்டத்தில் இவர்களது காதல் தம்பி ராமையாவுக்கு தெரிகிறது. இந்நிலையில் ஊருக்கே தீர்ப்பு சொல்லும் தம்பி ராமையா தன் மகளின் காதல் விஷயத்தில் என்ன முடிவெடுத்தார்..? அகிலுக்கும், சரண்யா நாக்கிற்கும் திருமணம் நடந்ததா..? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாகிறது என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தேசிகா. அதை சென்டிமென்ட், குடும்ப பாசம் மற்றும் காதல் ஆகியவற்றை கலந்து சொல்லியிருக்கிறார். படத்தின் இடைவேளை வரை மெல்ல நகரும் திரைக்கதை, அகிலின் உண்மை முகம் சரண்யாவுக்கும், தம்பி ராமையாவுக்கும் தெரிய வந்த பிறகு சூடு பிடிக்கிறது. விறுவிறுப்பான இரண்டாம் பாதி படத்திற்கு கூடுதல் பலம்.
பாசத்துக்கும், அன்புக்கும் ஏங்கும் இளைஞனாக அகில் உணர்வுபூர்வமாக நடித்துள்ளார். களவுத் தொழிலை கைவிட்டு, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் அகில், தன் காதலி தன்னை கைவிட்டுப் போனதை அறிந்ததும் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தன் காதலுக்காக அப்பா தம்பி ராமையாவுடன் போராடும் காட்சிகளில் மனதில் பதிகிறார் சரண்யா நாக். பாசக்கார அப்பாவாக, கோபக்கார ஊர்த் தலைவராக தம்பி ராமையா அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.விபச்சார கும்பல் தலைவியாக வருகிறார் சோனா! கோவை சரளா, ‘பசங்க’ சிவகுமார், செந்தில் என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தாலும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. சிரிப்பையே வரவழைக்காத காமெடி காட்சிகள் படத்திற்கு பலவீனம்.சிட்டிபாபுவின் ஒளிப்பதிவு சரியான விதத்தில் அமையவில்லை. செல்வகணேஷின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘ரெட்ட வாலு’ காதலுக்காக வீட்டை விட்டு பிரிந்து சென்று பெற்றோர்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் பிள்ளைகள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பு…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி