சென்னை:-விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது விஜய் பேசும்போது, நான் என்னை தியாகி என்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் நிச்சயமாக துரோகி கிடையாது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன். நாங்க கத்தி படம் எடுத்தது சண்டை போடுவதற்கு அல்ல. ரசிகர்கள் பார்த்து சந்தோஷமாக ரசிப்பதற்காகதான் எடுத்திருக்கிறோம்.
உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் அது தெளிவாகும். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும். ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு, ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருக்கும் பிறகு போக போக அதுவே பழகிவிடும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி