புதுடெல்லி:-புனித நதியாக வணங்கப்படும் கங்கை நதி, பிணங்களும், குப்பை கூளங்களும் போடப்படுவதால் மாசு அடைந்து வருகிறது. எனவே, கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் நதி மேலாண்மைத்துறை மந்திரி உமாபாரதி பொறுப்பு ஏற்றுள்ளார்.இந்நிலையில், டெல்லியில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், உமாபாரதி இதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது:–
கங்கை நதியை சுத்தப்படுத்துவது பற்றி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. பேசுவதை விட செயல்படுவதில்தான் எனக்கு நம்பிக்கை.அடுத்த 3 ஆண்டுகளில் கங்கை நதியை சுத்தப்படுத்துவேன். 3 ஆண்டுகளில், கங்கை நதி, புனிதமான நதியாக தொடர்ந்து ஓடும்.மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. எனது வெற்றிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்கள் அனைவரும் உண்மையான குருக்களாக திகழ வேண்டும். மாணவர்கள், சிறந்த குடிமக்களாக மலர வேண்டும்.இவ்வாறு உமாபாரதி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி