செய்திகள்,விளையாட்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!… post thumbnail image
பெங்களூர்:-டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியா-இந்தியா இடையிலான உலக குரூப் பிளே-ஆப் சுற்று பெங்களூரில் நடந்தது. இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.இந்நிலையில் கடைசி நாளான நேற்று நடந்த முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 144-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மனும், 61-ம் நிலை வீரர் செர்பியாவின் துசன் லாஜோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

5 செட் வரை மல்லுகட்டிய இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 1-6, 6-4, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் லாஜோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றியை பெற சோம்தேவ் 3 மணி 37 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. சோம்தேவின் அசத்தலால் போட்டித் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி