சென்னை:-விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று ஐ படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளார்.
இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அவர், இன்று மதியம் 2.45 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி