இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறுகையில், கிட்டத்தட்ட எல்லா கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் தவிர்த்து விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நடித்து வருகின்றனர். அதை நாங்கள் கண்டு கொள்வதில்லை, எங்களுக்கு சம்பந்தப்பட்ட வீரர் போட்டியின் போது சரியாக விளையாட வேண்டும், அதைத்தான் நாங்கள் பார்ப்போம், ஆகையால் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
பிசிசிஐ., தரப்பில் இருந்து இப்படியொரு அறிவிப்பு வந்ததையடுத்து படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஹீரோ மட்டும் முடிவாகியுள்ளது, தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி