அதே சமயம் பூமியும் சூரியனைச் சுற்றி வேகமாய் வேறு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் இன்று மங்கள்யான் பூமியை விட்டு 214,116,155 கி.மீ தூரத்தில் பயணிக்கிறது. இந்தத் தூரத்தால் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையில் இருவழிச் செய்திப் பரிமாற்ற நேரம் 1427.4 வினாடிகள். செவ்வாய்க் கிரகத்தை வேகமாக நெருங்கும் மங்கள்யான், தனது இலக்கிலிருந்து 2,79,5582 கி.மீ தூரத்தில் தனது இலக்கை நோக்கி இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்தே நாட்களில் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் நுழைந்திருக்கும்.
மங்கள்யான் விண்கலம் தனது 95 சதவீத பயணத்தை பூர்த்தி செய்து விட்டது.இன்னும் பயணம் செய்ய 40 லட்சம் கிலோமீட்டர்களே உள்ளன. தனது நிலை குறித்த பல்வேறு தொகுதிகள் அளவீடுகள் குறித்து முக்கிய தகவல்களை மங்கள்யான் அனுப்பி வைத்து உள்ளது. இந்த தொலைக்கணிப்பு சமிக்ஞை என்று அழைக்கப்படுகிறது.இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதன் சமூக தளத்தில் வெளியிட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி