சென்னை:-நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 80களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பரீட்சைக்கு நேரமாச்சு.இப்படம் ஒரு நாடகத்தை தழுவிய கதையாம். அந்த நாடகத்தை எழுதி அரங்கேற்றியவர் ஒய்.ஜி. பார்த்தசாரதி.
தற்போது உள்ள மக்களின் ரசனைக்கேற்ப இந்த நாடகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் ஒய்.ஜி.மகேந்திரன் செப்டம்பர் மாதம் 14ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், என் தந்தை உருவாக்கிய ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நாடகத்தை நான் மீண்டும் மேடையேற்ற ஆசைப்படுகிறேன். ஒரு சந்திப்பில் ரஜினியை சந்தித்த போது, நாம் ஒரு நாடகத்தை உருவாக்கலாம் என்று கூறினார். அவருக்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளேன்.ஆனால் அதில் எப்போது நடிக்க ஒப்புக் கொள்வார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி