சென்னை:-
நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த
சிம்பு மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர், அவருடன் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா தியேட்டர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, தனிஒருவன் படத்தில் நடிக்கும்
ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. எப்போதோ நிறைவேற வேண்டிய அது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று உற்சாகம் பொங்க சொல்கிறார்.
அதற்கடுத்தபடியாக உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலேயே நயன்தாராவிடம்தான் கால்சீட் கேட்டேன் அப்போது அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னதால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினேன் என்கிறார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாரா உறவில் விரிசல் விழுந்ததால், இது கதிர்வேலன் காதல் படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணி டூயட் பாடியவர், இப்போது நண்பேன்டா படத்திற்கும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்து நடித்துக்கொண்டு வருகிறார். நயன்தாராவுடன் மீண்டும் நடிக்கும் ஆசையில்தான் முதலில் அப்படத்துக்கு புக் பண்ணியிருநத காஜல் அகர்வாலையே கழட்டி விட்டார் உதயநிதி.
அதேபோல், இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியில் இருந்து அனைவருமே நயன்தாராவுடன் நடிப்பதில் அளவற்ற ஆசையில்தான் இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் தான் நடிக்க ஓராண்டு ரெட் கார்டு விழுந்து விட்டதை நினைத்து பீல் பண்ணிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழ் சினிமா ஹீரோக்களிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த வரவேற்பைக்கண்டு சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

சென்னை:-நடிகை நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம். என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின்…
கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரித்த ‘எதிர்நீச்சல்‘ படத்திலும் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாராவை ஆட ஒப்பந்தம் செய்தார்கள். அதைக் கேட்டு சிவகார்த்திகேயன் குஷியானார். ‘நெனச்சிகூட பாக்கல நயன்தாராவோட நடிப்பேன்னு தேங்க்ஸ் தனுஷ் சார்‘ என்று அவருக்கு நன்றி சொன்னார். உடனே தனுஷ், ‘நயன்தாரா நடிக்கிறாங்க, ஆனா அவரோட டான்ஸ் ஆடப்போறது நீ இல்ல, நான்‘…

சென்னை:-நயன்தாராவுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்று ஹீரோக்கள் கூறி வருவது போன்று, சில இயக்குனர்களும் அவரை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி செல்லும் இயக்குனர்கள், நயன்தாராவுக்கு அவர் எதிர்பார்ப்பது போன்று பர்பாமென்ஸ் வேடமாகவே கொடுத்தபோதும, ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் இளவட்ட ரசிகர்களை கவர் பண்ணும் வகையில் அவரை தூக்கலாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்களாம். அதுபற்றி நயன்தாரா…