அந்த லஞ்சத்தை வாங்கியது தனது அப்பாதான் என்று தெரிந்ததும், ஆஜீத் அந்த பணத்தை எடுத்துவந்து யாழினியிடம் கொடுத்து விடுகிறார். இதேபோல் போலீசாக இருக்கும் சூர்யேஸ்வரின் அப்பாவும் லஞ்சம் வாங்கி திளைக்கிறார்.தனது அப்பாக்கள் லஞ்சம் வாங்குவதை தட்டிக் கேட்க நினைக்கும் இவர்கள், இதை நேரடியாக தங்களுடைய மியூசிக் மாஸ்டரான பிரவீணிடம் சென்று முறையிடுகின்றனர். அவர், லஞ்சம் வாங்கி கொழுத்து போயிருக்கும் பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து இல்லாத ஏழைகளிடம் கொடுக்கும் இமான் அண்ணாச்சியை கைகாட்டுகிறார்.இமான் அண்ணாச்சியை இவர்கள் சந்தித்து, தங்கள் அப்பாக்கள் லஞ்சம் வாங்காமல் தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சின்னத்திரையில் பாடகர்களாக வலம்வந்த ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்கேட்ஸ் அழகேசன் உள்ளிட்ட பலர் நடிகர்களாக உருமாறியிருக்கிறார்கள். அனைவரும், ஓரளவுக்கு நடித்திருத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
நம் நாட்டின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருப்பதே லஞ்சம் தான். குழந்தையை கொஞ்சும் அப்பாக்களைவிட லஞ்சத்துக்காக கெஞ்சுபவர்கள்தான் அதிகம். அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் இப்படியொரு படம் மாதத்திற்கு ஒன்று ரிலீஸ் ஆகவேண்டும். அப்போதுதான் லஞ்சம் வாங்கும் பெற்றோர்களை வீட்டிலிருக்கும் குழந்தைகள் தட்டிக் கேட்பார்கள். இதை எடுத்துச் சொன்ன இயக்குனர் நித்தியானந்தனுக்கு பாராட்டுக்கள்.பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து ஏழைகளிடம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் செய்யும் சேட்டைகளை ரசிக்க முடியவில்லை. படத்தின் இசையமைப்பாளரான பிரவீண் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு காதலியும் இருக்கிறார். இவர் காதலிக்கும் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை அருமை. பாடல்களும் அலுப்பு தட்டவில்லை.
மொத்தத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ புதியதோர் உலகிற்கான பாடம்………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி