மனோஜ் பாரதி சில படங்களில் நாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். சமீபத்தில் அப்பா பாரதிராஜா இயக்கத்தில் வந்த ‘அன்னக்கொடி’ படத்தில் கூட வில்லனாக நடித்தார். ஆனால், அவரால் ஒரு நடிகராக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அவர் நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார்.நீண்ட நாட்களாகவே ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாராம். தற்போது மாபெரும் வெற்றி பெற்ற அப்பாவின் படத்தையே ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்
இன்றைய காலத்திற்கும் பொருத்தமான படமாக இருக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். கமல்ஹாசனுக்கு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ’16 வயதினிலே’ படத்தை இயக்கிய பாரதிராஜாவின் மகன் என்பதால் ஸ்ருதிஹாசனும் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி