சென்னை:-அவ்வப்போது தனது படங்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகை திரிஷா, பல சமயங்களில் டேக்கா கொடுத்தும் வருபவர். அப்படிப்பட்ட திரிஷா, தமிழ், தெலுங்கு படங்களுக்கு டேக்கா கொடுப்பது போன்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடித்து வந்த ‘பவர்’ படத்தின் ஆடியோ விழாவையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
அதையடுத்து, அங்கிருந்து அவருக்கு கண்டன குரல்கள் அணிவகுத்தன. இதனால் ஆடிப்போய் விட்டார் திரிஷா. உடனடியாக பெங்களூர் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டவர், மீடியாக்களை அழைத்தும் தான் வேறு படத்தின் படப்பிடிப்பில இருந்ததால்தான் கலந்து கொள்ள முடியவிலலை என்றும் தனது நிலையை விளக்கி விட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி