ஆனால் அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதைத் திரைப்படமாக தயாரிக்க நான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி என்னை ஏ.ஆர்.முருகதாஸிடம் அழைத்துச் சென்றார்.கதையைக் கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார். கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது ‘கத்தி’ திரைப்படத்தின் கதை நான் சொன்ன ‘மூத்த குடி’ கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.
எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ‘கத்தி’ திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மீஞ்சூர் கோபி தன் கதையின் நகலை அட்வகேட் கமிஷனர் சங்கரிடம் சமர்ப்பித்துவிட்டார். ஏ.ஆர். முருகதாஸோ இன்னமும் கதையின் நகலைக் கொடுக்கவில்லை. என்ன காரணம். ஏன் தயங்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த வழக்கில் அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். இதுவரை கோபியை முருகதாஸ் சந்தித்ததே இல்லை. அவரிடம் எந்தக் கதையையும் கேட்கவில்லை. அதோடு, கதையின் நகலை இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு விவகாரமும், கதையில் உள்ள முக்கியமான அம்சங்களும் வெளியில் கசிந்துவிடும். அதனால் ‘கத்தி’ திரைப்படத்தின் வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி