லண்டன்:-பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த ரூனேவுக்கு, தற்போது இரண்டாவது முறையாக கேப்டன் பதவி கிடைத்துள்ளது.விம்ப்ளேயில் நடக்கும் நட்புரீதியிலான போட்டி மற்றும் பசேலில் நடக்கும் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்று ஆகிய போட்டிகளுக்கான 22 வீரர்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஜேக் கோல்பேக், காலம் சாம்பர்ஸ், டேனி ரோஸ் மற்றும் பெபியான் டெல்ப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறாத டோட்டன்ஹாம் கிளப்பின் ஆண்ட்ரசும் இடம் பெற்றுள்ளார். எவர்டன் கிளப்பின் தடுப்பாட்ட வீரர் ஜான் ஸ்டோன்சுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி