இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நாட்டில் எண்ணற்ற ஆபாச இணைய தளங்கள் உள்ளன, அது தொடர்பான விவரங்களை தரத் தயார் என வழக்குதாரர் தரப்பில் கூறப்பட்டது.அப்போது நீதிபதிகள், கடந்த 1½ ஆண்டு காலத்தில் ஒரு ஆபாச இணையதளம் கூட தடை செய்யப்படவில்லை. இது ஏன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும் இத்தகைய இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் 4 வார காலம் அவகாசம் வழங்கினார்கள்.ஆபாச இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, 15 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழு அப்போது விளக்க அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி