அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அணுசக்தியில் வல்லமை படைத்த ரஷ்யாவிடம் வாலாட்ட வேண்டாம்: புதின் எச்சரிக்கை!…

அணுசக்தியில் வல்லமை படைத்த ரஷ்யாவிடம் வாலாட்ட வேண்டாம்: புதின் எச்சரிக்கை!…

அணுசக்தியில் வல்லமை படைத்த ரஷ்யாவிடம் வாலாட்ட வேண்டாம்: புதின் எச்சரிக்கை!… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைநகர் மாஸ்கோ அருகே க்ரெம்ளெனில் உள்ள செலிஜர் ஏரிக்கரையில் இன்று மாணவர்களிடையே பேசுகையில் உக்ரைன் அரசின் வன்முறையில் இருந்து கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்ய மொழி பேசும் மக்களின் நலன்களை காக்கும் வகையில் கிரிமியா என்ற புதிய நாட்டை வடிவமைக்க நினைத்த போராளிகளுக்கு ராணுவ உதவிகளை செய்ய நேரிட்டத என்று புதின் தெரிவித்துள்ளார்.

விக்டர் யூனுகோவிச்சை பதவியிறக்கம் செய்ததை ஏற்றுக் கொள்ளாத கிழக்கு உக்ரைன் மக்களை சமாதானப்படுத்த உக்ரைன் அரசு தவறிவிட்டதால்தான் கிரிமியா தனியாக பிரிந்துப் போக நேர்ந்தது என்று குற்றம் சாட்டினார். பெரிய அளவிலான தாக்குதல்களில் இருந்து விலகியிருக்கவே ரஷ்யா விரும்புகின்றது. நாங்கள் அதை விரும்பவும் இல்லை. திட்டமிடவும் இல்லை. எனினும், ரஷ்யாவின் மீது தொடுக்கப்படும் எவ்வித தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.

எங்களுடன் பிரச்சனை வைத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது என்பதை நமது கூட்டாளிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.ரஷ்யாவுடன் பெரிய அளவிலான மோதல் போக்கை கட்டவிழ்த்து விட யாரும் நினைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அணுசக்தியில் வல்லமை கொண்ட முன்னணி நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி