மெக்சிகோ:-மெக்சிகோவின் வட மேற்கில் ஹெர்மோசிலோ பகுதி உள்ளது. அங்குள்ள ஒரு பண்ணை நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. 26 அடி ஆழ அந்த வெடிப்பு சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை வியாபித்து இருந்தது.பண்ணை நிலத்தில் தொடங்கிய அந்த வெடிப்பு நெடுஞ்சாலையையும் பாதித்து கடற்கரை வரை இருந்தது. அது 16 அடி அகலத்தில் இருந்தது.
இந்த வெடிப்பு காரணமாக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பூமியில் திடீரென வெடிப்பு ஏற்பட்ட காரணம் குறித்து மண்வள நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
இப்பகுதியில் விவசாயிகள் தடுப்பணை கட்டியுள்ளனர். அதில் இருந்து கசிந்த நிலத்தடி நீர் மிருதுவான நிலப்பகுதிக்கு மேலே பீறிட்டு வந்ததால் பூமியில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி