செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சென்னை – 600028 தமிழ் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்!…

சென்னை – 600028 தமிழ் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்!…

சென்னை – 600028 தமிழ் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்!… post thumbnail image
சென்னை:-2007-ம் ஆண்டு வெளியான படங்களில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த படம் சென்னை-600028. இந்தப்படத்தின் மூலம் தான் நடிகராக இருந்த வெங்கட்பிரபு இயக்குநராக அறிமுகமானார். கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வஸந்த், விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்பு இன்றி வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்திற்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு உலகளவில் ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் வெளிவரும் நாளிதழ் ஒன்று வெளியிட்ட, உலகின் சிறந்த கிரிக்கெட் சார்ந்த டாப்-5 படங்களில், வெங்கட் பிரபுவின் சென்னை-600028 படமும் இடம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி