செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் கமலின் மகளான விஜய்யின் தங்கை…!

நடிகர் கமலின் மகளான விஜய்யின் தங்கை…!

நடிகர் கமலின் மகளான விஜய்யின் தங்கை…! post thumbnail image
அனைவரின் வரவேற்பையும் பெற்று மலையாளத்தில் வசூலைக் குவித்த ‘த்ரிஷ்யம்’ தமிழில் ‘பாபநாசம்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படம் இயக்கிய ஜீது ஜோசப் தமிழிலும் ரீமேக் செய்து இயக்குகிறார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில், தமிழில் கமல் நடிக்கிறார். கமலுக்கு மனைவியாக கௌதமி நடிக்க இருக்கிறார். கமலின் மூத்த மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் ‘போராளி’ ,’நவீன சரஸ்வதி சபதம்’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கமல்-கௌதமி தம்பதியரின் இளைய மகளாக எஸ்தர் என்னும் குழந்தை நட்சத்திரம் நடிக்க உள்ளார். கான்ஸ்டபிளாக கலாபவன் மணி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி