அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. ஆனாலும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துள்ளதால் அவரை போட்டிபோட்டு ஒப்பந்தம் செய்கின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமா தேவி படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுள்ளார். பாகுபலி என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் இளம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இளமை ரகசியம் என்ன என்று அனுஷ்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். ஒரு மணி நேரம் யோகாவும் செய்கிறேன். மூச்சுப் பயிற்சியிலும் ஈடுபடுகிறேன். இரவு சாப்பாட்டை 8 மணிக்கு முன்னால் முடித்து விடுகிறேன். தினமும் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பேன். சைவ உணவுகளை சாப்பிடுகிறேன். என் உடல் அழகாக இருப்பதற்கு இதுவே காரணம். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி