ஆங்காங்:-உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசான், தான் நடித்த ட்ரங்கன் மாஸ்டர் என்ற படத்தில் குடி, குடித்து விட்டு சண்டைபோடு என்று டயலாக் பேசி நடித்திருந்தார். அதை ரசிகர்களும் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்தார்கள். ஆனால் சில வருடத்திற்கு பிறகு, ரசிகர்களுக்கு நாம் தவறான கருத்து சொல்லிவிட்டோமே என்று பீல் பண்ணியிருக்கிறார் ஜாக்கிசான்.
அதனால் அதன்பிறகு தான் நடித்த ட்ரங்கன் மாஸ்டர் பார்ட்-2 படத்தில் நடித்தபோது, குடிக்காதே, குடித்து விட்டு சண்டை போடாதே என்று மாற்று கருத்தினை சொல்லி நடித்தாராம். அதிலிருந்து இப்போது தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலுமே உலக சமூதாயத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் ஜாக்கிசான்.இந்த தகவலை சில தினங்களுக்கு முன்பு தனது நடிப்பில் உருவாகியுள்ள சைனீஸ் சோடியாக் என்ற படத்தை லண்டனில் பிரபலங்களுக்கு திரையிட்டு காண்பித்தபோது மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜாக்கிசான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி