செய்திகள்,திரையுலகம் மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!… post thumbnail image
சென்னை:-காதல் மன்னன் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்த நடிகை மானு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, சமீபத்தில் இவர் நடித்து வெளியான, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்று திறனாளி குழந்தைகள், விலங்கியல் பூங்கா ஒன்றில் பெரிய பாம்பு இருக்கும் கூண்டில் மாட்டிக் கொள்வதே என்ன சத்தம் இந்த நேரம் படத்தின் கதையாகும்.

இதனால் ஆகஸ்ட் 14 அன்று 250 மாற்று திறனாளி குழந்தைகளை அழைத்துச் சென்று இப்படத்தை பார்க்க வைக்க மானு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.அவரது மானு ஆர்ட்ஸ் நிறுவனம் இதற்காக சிறப்பு அனுமதி பெற்று, சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் 250 மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோவிற்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி